செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2015 (18:32 IST)

ஆப்பிள் போன்களின் விலையை குறைத்த வர்த்தக இணையதளங்கள்

வர்த்தக இணையதளங்களில் இந்தியாவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விலை 16 சதவீதம் வரை திடீரென குறைத்துள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு பற்றி ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. வர்த்தக இணையதள நிறுவனங்கள் விலை குறைப்பு செய்துள்ளது.
 
இந்தியாவின் முக்கிய வர்த்தக இணையதளங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்களின் விலை 16 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன.
 
16 ஜி.பி, 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. என அனைத்து வகைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் போன்களின் விலை முறையே ரூ. 62,000 முதல் ரூ.92,00 வரை இருந்து. தற்போது பிளிப்கார்ட்டில் ஐபோன் 6எஸ் (16ஜி.பி.)-ன் விலை ரூ.48,499 ஆக உள்ளது
 
சில நாட்களுக்கு முன்னர் வர்த்தக இணையதளங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன் 5எஸ் விலையை பாதியாக குறைத்து விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.