ஜியோவுக்கு போட்டியாக வேகத்தை அதிகப்படுத்தும் ஏர்டெல்


Abimukatheesh| Last Updated: சனி, 15 அக்டோபர் 2016 (19:26 IST)
ஜியோ வருகையை தொடர்ந்து அனைத்து நிறுவங்களுக்கு தங்களது இணையதள கட்டணத்தை குறைத்து வருகின்றனர். அதோடு பல சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

 

 
இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தங்களது தொலைதொடர்பு இணையசேவையில் 18 எம்.பி,பி,எஸ் வரை வேகம் வழங்கி வருகிறது.
 
விரைவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்த வேகத்தை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதோடு இந்த சேவையை 87 நகரங்களுக்கு விரிவுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
 
இந்த சேவையை முதலில் சோதனை கால அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் நபர்கள் புதிதாக மோடம் பெற வேண்டும். சேவை பிடிக்கவில்லை ஒரு மத காலத்திற்குள் மோடத்தை திரும்ப கொடுத்து அதற்கான கட்டணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :