ஏர்செல் அலைவரிசையை வாங்குகிறது பார்தி ஏர்டெல் நிறுவனம்


Suresh| Last Updated: சனி, 9 ஏப்ரல் 2016 (14:36 IST)
பல்வேறு வட்டாரங்களின் ஏர்செல் 4ஜி அலைவரிசையை வாங்க பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 


நாடு முழுவதிலும் உள்ள 8 வட்டாரங்களில் ஏர்செல் 4 ஜி அலைக்கற்றையை பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத் திட்டுள்ளன.
 
அதன்படி, தமிழ்நாடு, பிகார், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் வட கிழக்கு ஆகிய மாநிலங்களுக்கான அலைவரிசைக்கு ஒப்பந் தம் போடப்பட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தம் 2030 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 3,500 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :