வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (11:42 IST)

47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதில்லை

இந்தியாவில் பணிபுரிபவர்களில் 47 சதவீதத்தினர் ஒய்வு காலத்துக்காக சேமிக்கவில்லை என ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


 

 
இந்தியாவில் பணிபுரிபவர்கள் ஓய்வு காலத்துக்கான சேமிப்பை தொடங்காதவர்கள் அதிக அளவில் உள்ளனர். சேமிப்பை தொடங்கி அதனை தொடர முடியாதவர்களும் உள்ளனர். ஓய்வுகாலத்துக்காக சேமிக்காதவர்களின் சர்வதேச சராசரி 46 சதவீதம். ஆனால் இந்தியாவில் 47 சதவீதத்தினர் உள்ளனர்.
 
17 நாடுகளில் 18,207 நபர்களிடம் இணையதளம் மூலம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
 
இதில் இந்தியாவில் 44 சதவீதத்தினர் ஓய்வு காலத்துக்காக சேமிக்க தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அவர்களால் தொடர முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். 10-ல் ஒருவருக்கு ஓய்வு காலம் குறித்த முறையான ஆலோசனையே கிடைப்பதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.