ஹோண்டா புதிய சொகுசுக் கார் அறிமுகம்

Webdunia| Last Modified திங்கள், 21 பிப்ரவரி 2011 (17:16 IST)
உலகளாவிய அளவில் நன்மதிப்பைப் பெற்ற அக்கார்ட் வகை சொகுசுக் காரை நன்கு மேம்படுத்தி புதிய மாடல் ஒன்றை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 25,000 கார்களுக்கு மேல் விற்பனையாகியுள்ள அக்கார்ட் வகையின் புதிய வடிவமைப்புகளாக இரண்டு கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை ரூ.19.60 இலட்சத்திலிருந்து ரூ.25.41 இலட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் விருப்பங்களின் அடிப்படையில் மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த புதிய வகை கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதெனவு்ம, இதுவரை வெளிவந்த அக்கார்ட்களை விட பல சொகுசு வசதிகளை கொண்டுள்ளது என்றும் ஹோண்டா சியல் கார்ஸ் இண்டியாவின் தலைவர் தகாஷி நகாய் கூறியுள்ளார்.
அக்கார்ட் வகையின் 8வது தலைமுறை காரை மே, 2008இல் அறிமுகம் செய்து ஹோண்டா. 2.4 லிட்டர், 3.5 லிட்டர் ஆகிய இரண்டு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘புதிய அக்கார்ட்’ கார்களில் 2.4 லிட்டர் இயந்திரத் திறன் கொண்டது ரூ.19.6 முதல் 20.36 இலட்சமாகவும், 3.5 லிட்டர் இயந்திரத் திறன் கொண்ட கார் ரூ.25.41 இலட்சமாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :