ஹைபிரிட் தொழில் நுட்பத்தில் இயங்கும் ஸ்கிராப்யோ கார்

PR photo
PR
இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:

· இன்ஜின் இயங்க தேவை இல்லை என்று நினைக்கும் போது குறிப்பிட்ட நேரம் அதன் இயக்கத்தை நிறுத்தும் வசதி (ஸ்கிராப்யோ விஎல்எஸ் 2 செகண்ட், ஸ்கிராப்யோ எம்2டிஐ மாடலில் 5 செகண்ட்)
· இன்ஜினை இயக்க வைப்பதற்கு கிளட்சை காலில் அழுத்தினால் போதும்.
· குறைந்த எரிபொருள் எரிவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைகிறது. நீங்கள் மாசுபடுவதை குறைக்க உதவுகின்றீர்கள்.

Webdunia| Last Modified புதன், 30 செப்டம்பர் 2009 (16:26 IST)
மகேந்திரா நிறுவனம் ஹைபிரிட் தொழில் நுட்பத்தில் இயங்கும் புதிய ஸ்கிராப்யோ காரை, அதிக வசதிகளுடனும், கண்ணை கவரும் விதத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் ஸ்கிராப்யோ கார் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது ஸ்கிராப்யோ மாடலில் மைக்ரோ-ஹைபிரிட் என்ற நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் மஸ்ட்டி மஸ்குலர் என்ற பெயரில் சொகுசு காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பம்சம் சிக்னலில் நிற்பது போன்ற கார் ஓட தேவையில்லாத நேரத்தில் கார் இன்ஜினை தானகவே நிறுத்திவிடும். இதே போல் கார் தேவையான தேரத்தில் இன்ஜின் இயங்க ஆரம்பித்துவிடும். இதனால் உங்களக்கு பெட்ரோல் செலவு குறைவதுடன், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. நமது பணம் சேமிப்பு உள்ளாவதுடன், சுற்றுச் சூழல் மாசுபடுவது குறைவதால், உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது.
மகேந்திரா கார் நிறுவனம் மைக்ரோ-ஹைபிரிட் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில் நுடபத்தை மற்றவர்களும் பின்பற்றி கார்களை அறிமுகப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :