ஸ்பைஸ் ஜெட் தலைவரானார் கலாநிதி மாறன்

Webdunia| Last Modified திங்கள், 15 நவம்பர் 2010 (17:15 IST)
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அதன் தலைவராகவும், மேம்பாட்டு இயக்குனராகவும் ஆகியுள்ளார்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்புள்ள அறிக்கையில் இந்த விவரத்தை தெரியப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி மாறன், உடனடியாக அதன் நிர்வாக அமைப்பிற்கு புதிதாக ஐந்து இயக்குனர்களை நியமித்துள்ளார்.

எஸ. ஸ்ரீதரன், ஜே.இரவீந்திரன், நிக்கலாஸ் மார்ட்டின் பால், எம்.கே.ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குனர்களாகவும், தனது மனைவி காவேரியை முடிவெடுக்கும் அதிகாரமற்ற இயக்குனராகவும் நியமித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :