ரெனால்ட் கார் விற்பனை 2 மடங்காக உயர்வு

Webdunia|
FILE
ரெனால்ட் நிறுவனத்தின் கார் விற்பனை 2 மடங்காக உயர்ந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரெனால்ட் நிறுவனத்தின் 1,776 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலையில் விற்பனை 3,763 ஆக உயர்ந்து விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் டஸ்டர் கார்கள் மட்டும் 3,089 விற்கப்பட்டுளன. இதேபோல் ஸ்காலா கார்கள் 371ம், பல்ஸ் கார்கள் 292ம், புளூயென்ஸ் 10ம், கொலியோஸ் 1ம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் காலடி பதித்து இரண்டு ஆண்டுகளை ரெனால்ட் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இந்த காலத்தில் விற்பனை உயர்வு, இத்துறையில் உள்ள மற்ற நிறுவனங்களின் கார்களை விட, ரெனால்ட் நிறுவனத்தின் கார்களை பிரபலப்படுத்தியது எனறு பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :