முட்டை விலை 315 காசுகளாக உயர்வு!

Webdunia| Last Modified ஞாயிறு, 28 அக்டோபர் 2012 (13:04 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நேற்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 310 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 315 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:
ைதராபாத்- 290, விஜயவாடா, தனுகு- 286, பார்வாலா- 305, சென்னை- 305, மைசூர்- 310, பெங்களூர்- 310, மும்பை- 320, டெல்லி- 331, கொல்கத்தா- 325.

முட்டைக்கோழி கிலோ ரூ.54 ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.57 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நவராத்திரி பண்டிகை முடிவடைந்ததை தொடர்ந்து தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதேபோல் பரவலாக பெய்து வரும் மழை காரணமாகவும் முட்டை விற்பனை சூடுபிடித்து உள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் கூறினர்.
கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 45 காசுகள் அதிகரித்து உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :