பணவீக்கம் 0.83% ஆக அதிகரிப்பு

புது டெல்லி: | Webdunia|
பணவீக்கம் 0.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் மூன்றாவது வாரமாக அதிகரித்துள்ளது. அதற்கு முன் 13 வாரங்கள் எதிர்மறையாக இருந்தது.

செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம். 0.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தையை வாரத்தில் 0.37 ஆக இருந்தது.
தற்போது கணக்கிடப்பட்டுள்ள செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மீன் விலை 13%, தனியா, மசாலா பொருட்கள், மைசூர் பருப்பு, பன்றி இறைச்சி ஆகியவற்றின் விலை தலா 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆனால் உளுந்து 2%, சோளம், மக்காச் சோளம் ஆகியவை தலா 1% குறைந்துள்ளன.
இயற்கை ரப்பரின் விலை 2% குறைந்துள்ளது.

பருத்தி எண்ணெய், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை தலா 3%, புண்ணாக்கு விலை 2%, கடலை எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.

வெண்ணெய் விலை 4%, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நெய் விலை தலா 2%, நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய் விலை தலா 1% அதிகரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :