தங்கம் விலையில் சரிவு

Webdunia|
FILE
தங்கம் விலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சரிவு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. சென்னை சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,661க்கும், சவரன் ரூ.21,288க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.325 குறைந்து ரூ.28,455க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையை பொறுத்தமட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.44.20க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.925 குறைந்து ரூ.41,295க்கும் விற்பனையாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :