தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று திடீரென அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 வரை உயர்ந்து, நடுத்தர குடும்பங்கள் மற்றும் நகை பிரியர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,430-க்கு விற்பனையாகிறது.
ம்தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சம் (ரூ.2,45,000) என்ற புதிய நிலையை எட்டியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
