ச‌ந்தை‌க்கு வரு‌ம் புதிய ஐபேட்!

Webdunia|
WD
அதிவேக தரவுப் பரிமாற்றத்தை வழங்கும் செலுலார் நெட்வொர்க்குகளில் இயங்கக்கூடிய புதிய ஐபேட் 4ஜி நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவன‌ம் தெரிவி‌த்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள 4ஜி LTE நெட்வொர்க்குகளை இந்த புதிய ஐபேட் ஆதரிக்கும் அதே வேளையில், LTE நெட்வொர்க்குகள் இல்லாத நாடுகளில் 3ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் வகையிலும் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய 4ஜி ஐபேடில் வீடியோ ஸ்டிரீமிங், உள்ளடக்கம் மற்றும் படங்களைப் பதிவிறக்குதல், வலையில் உலாவுதல் போன்ற செயல்களை அதிவேக தரவுப் பரிமாற்றத்தில் செய்யலாம்.
12 விதமான அலைக்கற்றைகளை அணுகுவதற்கு வசதியாக இரண்டு செல்லுலார் ஆன்டெனாக்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை அணுகும் திறன் இந்தச் சாதனத்திற்கு உள்ளது. உலகின் எந்த இடத்திற்கு நீங்கள் பயணித்தாலும் எப்போதும் ஆன்லைனிலேயே இருக்கலாம்.

16ஜி.பை., 32 ஜி.பை., 64 ஜி.பை., என்று மூன்று சேமிப்பு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபேட் 4ஜியின் பேட்டரித் திறன் வை-ஃபை இணைப்பின் மூலம வலையில் உலாவும்போதும், வீடியோ பார்க்கும்போதும், இசையைக் கேட்டு மகிழும்போதும் 10 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும், செல்லுலார் நெட்வொர்க் மூலம் வலையில் உலாவும்போது அதன் பேட்டரித் திறன் 9 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் அதன் தொழில்நுட்பக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்டினா டிஸ்பிளே, ஏ5எக்ஸ் சிப், உயர்நுட்ப வீடியோக்களைப் படம் பிடிக்கும் திறன் படைத்த கேமரா வசதி என்று பல அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஐபேட் 4ஜி, யு.எஸ்., பிரிட்டன், ஆஸ்ட்ரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் முதற்கட்டமாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News Summary : The new iPad goes on sale Friday in the US and nine other countries. This new iPad is Apple's third version and sports a faster processing chip and a sharper screen. It works with a faster cellular 4G Network.


இதில் மேலும் படிக்கவும் :