சென்னையில் எல்ஐசியின் 'உங்கள் இல்லம் 2013' கண்காட்சி

Webdunia|
FILE
எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனத்தின் வீட்டு வசதி கண்காட்சி 'உங்கள் இல்லம் 2013' சென்னையில் தொடங்கியது. இந்த கண்காட்சியை எல்ஐசி ஹவுசிங் நிதி நிறுவனத்தின் (எல்ஐசி ஹெச்எஃப்எல்) நிர்வாக இயக்குநர் - தலைமை செயல் அதிகாரி வி.கே.சர்மா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

எழுபதுக்கும் மேற்பட்ட பிரபல வீட்டு வசதி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், குறைந்த விலையிலான வீடுகள் முதல் உயர் ரக, ஆடம்பரமான அடுக்குமாடி வீடுகள் வரை காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சியில் சலுகைகள், தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெறும் வாடிக்கையாளர்கள், உடனடியான ஒப்புதலை பெறலாம். நியூ பாக்யலட்சுமி, ஃபிக்ஸட் 10, ஷ்யூர் ஃபிக்ஸட் ஆகிய மூன்று வீட்டுக் கடன் திட்டங்களை எல்ஐசி ஹெச்எஃப்எல் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு வசதிக் கடன் பெற விரும்புவோரின் தேவைகளையொட்டி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"உங்கள் இல்லம் 2013' கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :