2010-2011ஆம் நிதியாண்டின் கணக்குப்படி 1.73 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொருளாதாரமாகத் திகழும் இந்தியா, அடுத்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக வளர்ந்து 5.6 டிரில்லியன் டாலர்களாக பொருளாதாரமாக உயரும் என்று பொருளாதார ஆய்வு அமைப்பான டூன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் கூறியுள்ளது.