துர்காஷ்டமி அன்று துர்க்கையை வழிபட்டால் நல்லது.

Webdunia|
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: நவராத்திரிப்பண்டிகையை கொலு வைத்து சில குடும்பங்கள் கொண்டாடுகின்றன. இதனை பெரும்பான்மையானவர்கள் கொண்டாடுவதில்லை! கொலு வைத்து கொண்டாடுவது அவசியமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இப்போது நாம் சிவனுக்கு சிவ ராத்திரி கொண்டாடுகிறோம். சிவராத்திரி என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றைக்கு ஜெபிக்ககூடிய மந்திரங்களுக்கு கூடுதல் சக்தி உண்டு. அதுபோல் அன்றைக்கு நாம் எந்தக் காரியத்தை செய்கிறோமோ அதற்கு ஒரு நிலைப்புத் தன்மை இருக்கும். அன்று நாம் ஒரு பொருள் வாங்கினால் அது நிலைத்து நிற்கும், அது நம் கையை விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. மாதாமாதம் சிவராத்திரி வருகிறது.
அதுபோலவே அம்பாளுக்கு உகந்தது இந்த நவராத்திரி விழா. இந்தப் பண்டிகை ரொம்ப ரொம்ப விசேடமானது. ஆனால் அத்தனை பேரும் தங்களது வீடுகளில் கொலு வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கொலு வைக்கப்பட்டிருக்கும் இல்லங்களுக்குப் போய்வந்தாலே போதுமானது. முக்கியமான ஆலயங்கள், மடங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் இப்போதெல்லாம் கொலு வைக்கிறார்கள். கொலு வைப்பதை நாம் ஒரு சம்பிரதாயம், சமயச் சடங்கு என்பதாகப் பார்க்கக் கூடாது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உடனடியாக கொலு வைப்பது நல்லது. ஏனென்றால் குழந்தைகளுக்கு இதன் மூலம் அதிகமான கற்பனை வளங்கள் கிடைக்கும். அன்றைக்குகு கூட ஒரு நண்பர் வீட்டுக்கு கொலு வைத்திருந்ததை பார்க்கச் சென்றிருந்தோம், அந்த வீட்டுப் பையன் சில விஷயங்களை 'கிரியேட்டிவ்' ஆகச் செய்திருந்தார். அந்தப் பையனே அனைத்தையும் உருவாக்கியிருந்தார். இது மிகவும் முக்கியமானது. மேலும் இறைவனுடைய திருவுருவத்தை உணர்வது போன்ற ஆன்மீக விஷயங்களும் இதில் அடங்குகிறது. இதில் முக்கிய அம்சன்னு பார்த்தோமானால் பிள்ளைகள் தங்கள் ஆர்வத்திற்கேற்ப பொம்மைகளை தேர்வு செய்து அதனை ஒழுங்கமைக்கிறார்கள், இதுதான் மிகவும் கொலுவில் முக்கியமானது. அந்தப் பையன் 42 படிக்கட்டுகளை கொலு வைப்பதற்கு அடையாளப்படுத்தியிருந்தார். இது குழந்தைகளின் ஆர்வத்தை பெரிதும் தூண்டுவது.
மேலும், கொலு வைக்கும் வைபவம் என்பது இறைவனின் திருநாமத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு. அடுத்தடுத்து வருகிற சந்ததிகள் இதனை புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் எல்லாவற்றையும் தாண்டி பிள்ளைகளிடம் கொலு அமைப்பதன் மூலம் ஏற்படும் 'கிரியேட்டிவிடி" - கற்பனை வளம். இதில் அஷ்டமி ரொம்ப ரொம்ப முக்கியம். அஷ்டமியில அதுவும் துர்காஷ்டமி. மாதம் முழுதும் இரண்டு அஷ்டமிகள் வரும். வளர் பிறையிலும் அஷ்டமி வரும் தேய்பிறையிலும் அஷ்டமி வரும். ஆனால் இந்த துர்க்காஷ்டமி என்பது ரொம்ப விசேடம். குறிப்பாக அந்த 8வது நாளில் வரும் துர்க்காஷ்டமி மிகவும் விசேஷமானது. அதில் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும், திருஷ்டி போவது குறிப்பாக கண் திருஷ்டி, ஓமல் அதெல்லாம் போய்விடும். மேலும் சிலர் பில்லி, சூனியம்னெல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி விஷயங்களெல்லாம் துர்காஷ்டமியில் போய்விடும். இந்த துர்காஷ்டமி நாளில் துர்க்கையை வழிபட்டால் சிறப்பானது. மற்ற நாள்களில் வழிபடுகிறார்களோ இல்லையோ துர்காஷ்டமி அன்றைக்கு துர்கை வழிபாடு மிகவும் விசேடமானது. எனவே இது போன்ற விஷயங்களால் நவராத்திரி நமக்கு எல்லா வலிமையும் கொடுப்பதாகும். மேலும் இறைவனே வந்து குடிகொள்கிற மாதிரியான விசேடம் இது.
சைவம், விணவம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் கொலு பொம்மைகள் இடம்பெற்றிருக்கும். சில சமயக் குறவர்கள், தமிழ் அறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று அனைத்து தரப்பு பொம்மைகளும் கொலுவில் இடம்பெறுகிறது. இப்ப, அது ஒவ்வொண்ணுத்துக்கும் பின்னால உள்ள சரித்திரத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடிகிறது. எனவே கொலு என்பது வெறும் சம்பிரதாயமாக அல்லாமல் நாட்டைப் பற்றிய, தலைவர்களைப் பற்றிய விவரங்களை சொல்லிக் கொடுப்பதாகவும் அமைகிறது. எனவே எல்லாரும் கொலு வைக்க முடியாது. முறைப்படி அது நடந்தால்தான் வைப்பது என்ற நிலை உள்ளது.
துர்காஷ்டமி ரொம்ப விசேடம், மறுநாள் மகா நவமி சரஸ்வதி பூஜை வருகிறது, இந்த நாளில் சரஸ்வதியின் அனுகிரகம் அனைவருக்கும் கிடைக்கிறது. பிறகு கடைசி நாள் விஜய தசமி வருகிறது. இந்த நாள் மிகவும் முக்கியமானது, அன்றைக்கு எந்த நட்சத்திரம், எந்த யோகம் இருந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கலாம். ஏனென்றால் இது கல்விக்குறிய நாள். அன்றைக்குக் கல்வியைத் துவங்கினால் அது வெற்றியைகொடுக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.
அரசர்கள் காலத்தில் பார்த்தால் விஜயதசமியன்றுதான் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பார்கள், போர்கூட அன்றைய தினம்தான் முடிவு செய்யப்படும். அதனால்தான் விஜயதசமி என்பது விஜயித்தல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது. விஜயதசமி அன்று பயணம் செய்தால் அது வெற்றிப்பயணமாக அமையும். எனவே நவராத்திரி என்பது ரொம்ப விசேஷமானது.


இதில் மேலும் படிக்கவும் :