ஆயுத பூசையா, சரஸ்வதி பூசையா?

Webdunia|
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: இந்த நவராத்திரி பண்டிகையை பலரும் பலவிதமாக கொண்டாடுகின்றனரே. சிலர் ஆயுத பூசை என்று கொண்டாடுகின்றனர், சிலர் சரசுவதி பூசை என்றும், வங்காளிகள் துர்கா பூசை என்றும், தசரா என்றும் கொண்டாடுகின்றனர். இவைகளில் எதை யார் கொண்டாடுவது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நீ சொன்ன அனைத்தும் நவராத்திரி பண்டிகைகுள் வருவதுதான். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள் இதனை ஆயுத பூசையாக கொண்டாடுகின்றனர். அலுவலகங்களுக்கும் ஆயுத பூசைதான். வீடுகளுக்கு அது சரசுவதி பூசை.

இதுவே கொல்கட்டாவில் பார்த்தீர்களானால், கல்கத்தா காளி மிகவும் விசேடமான தெய்வம். அங்கு (வங்காளத்தில்) நவராத்திரி பண்டிகையின் 8வது நாள் அன்று துர்கா பூசை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. துர்கா அந்தப் பகுதியில் தெய்வமாக வழிபடப்படுகிறது. தமிழ்நாட்டில் நாம் சரசுவதி பூசைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகிலுள்ள கூத்தனூர் மிகவும் முக்கியமானது. இந்தியாவிலேயே சரசுவதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இடம் தமிழ்நாடுதான்.
காஞ்சியில் உள்ள காமாட்சியம்மன் ஆலயத்திலேயே அம்மனுக்கு அருகில் சரசுவதிக்கு தனி சன்னதி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :