சென்னை பல்கலை உடனடித் தேர்வு அறிவிப்பு

Webdunia| Last Modified செவ்வாய், 29 ஜூன் 2010 (13:29 IST)
FILE
சென்னை பல்கலைக் கழகம் நடத்திய முதுகலைத் தேர்வுகளில் ஒரே ஒரு பாடத்தில் தோல்வியைத் தழுவிய மாணவர்களுக்கான உடனடித் தேர்வு அறிவிப்பை சென்னை பல்கலைக் கழகத்தின் தேர்வு ஆணையர் வெளியிட்டுள்ளார்.

எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ.(எல்.எம்), எம்.ஏ.(எச்.ஆர்.எம்.), எம்.பி.ஏ. இறுதி செமஸ்டர் தேர்வு எழுதி, அதில் ஒரே ஒரு பாடத்தில் மற்றும் தேராதவர்களுக்கு உடனடித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்புகளுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.300ம், எம்.பி.ஏ.விற்கு ரூ.600ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதிவரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் சென்னை பல்கலைக் கழக விசாரணை மையத்தில் கிடைக்கும் என்று பல்கலைக் கழக தேர்வு ஆணையர் கூறியுள்ளார்.
உடனடித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தேர்வு வகுப்பு, பல்கலைக் கழக தர வரிசைப் பட்ட்டியலில் இடம் உள்ளிட்ட எந்த சிறப்புகளுக்கும் தகுதி பெற மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :