காமராஜர் பல்கலை. முதுநிலை பருவமுறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரை| Webdunia|
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு பருவமுறை (CBCS) ஏப்ரல்-2009 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

எம்.காம்., எம்.காம். (வங்கியியல்), எம்.காம். (நிதி), எம்.காம். (கணினிப் பயன்பாடு), அயல்நாடு வணிகத்தில் முதுநிலை, எம்.ஏ. (சுற்றுலா மேலாண்மை), எம்.எச்.ஆர்.எம்., சமூகப் பணியில் முதுநிலை, எம்.எஸ்சி (ஐ.டி.), எம்.எஸ்சி (சிஎஸ் மற்றும் ஐடி), எம்.எஸ்சி. (கணினி அறிவியல்), எம்.எஸ்சி. (கணிதம்), எம்.எஸ்சி. (இயற்பியல்), எம்.எஸ்சி. (உணவு தரப்படுத்துதல்), எம்.எஸ்சி. (ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு) உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை வரும் 8ஆம் தேதிக்குள் தேர்வாணையர் அலுவலகத்துக்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என பல்கலை. தேர்வாணையர் ச.சண்முகையா தெரிவித்துள்ளார்.
Madurai Kamaraj University PG Semester Results April 2009

Madurai Kamarj University UG Semester Results April 2009

Madurai Kamaraj University CBCS PG Semester Results April 2009
இதில் மேலும் படிக்கவும் :