வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By Webdunia
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2014 (15:39 IST)

மாசடைந்த காற்று 70 லட்சம் பேர் உயிர்களை பறித்துள்ளது!

2012ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுதும் மாசடைந்த நச்சுக்காற்றுக்கு 70 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் அபாய மணி அடித்துள்ளது.
FILE

அமிர்தசரஸ் மிகவும் மாசடைந்த நகரமாக கருதப்படுகிறது. அங்கு 2012-இல் 8 சாவில் ஒரு சாவு நச்சுக்காற்றினால் ஏற்படுகிறது என்ற பயங்கர உண்மையையும் வெளியிட்டுள்ளது. சமையல் புகை மற்றும் வாகனப்புகையினால் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது.

வெளியில் மட்டுமல்ல வீட்டினுள்ளும், கட்டிடத்தினுள்ளும் இந்த மாசடைந்த காற்றின் தாக்கம் நம்மை பெரிய அளவில் அச்சுறுத்துகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் அதிகமாகும் மாசின் அளவினால் இருதய நோய், நுரையீரல் நோய், நுரையீரல் புற்று ஏற்படுகிறது.

ஆசியப் பகுதிகளில் விறகு மற்றும் கரி அடுப்பில் சமைப்பதினால் ஏற்படும் சாவு எண்ணிக்கை 2012ஆம் ஆண்டு 4.3 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
FILE

வளரும் நாடுகளிலி வாகனப்புகையினால் ஏற்படும் நோய்களுக்கு 37 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா, இந்தோனேசியா, மேற்கு பசிபிக் நாடுகளான சீனா தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் காற்று கடுமையாக அளவுக்கு மீறி மாசடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் மட்டும் 59 லட்சம் பேர் காற்றில் அடைந்துள்ள மாசினால் மரணமடைந்துள்ளனர்.

வளர்ச்சிதான் வாழ்க்கை என்று அரசியல் பொருளாதாரம் தப்புத் தப்பாக பாடம் எடுக்கும்போது இனி இத்தகைய சாவுகளைப் பற்றி பேசி என்ன பயன்?