அண்டார்டிகாவில் உள்ள, மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் உள்ளது டான் ஜுவான் நீர்நிலை. சாக்கடலைக் காட்டிலும் இந்த நீரில் உப்பு அதிகம் உள்ளது, உலகிலேயே அதிக உப்புத் தன்மை உள்ள நீராதாரம் இதுவே, இதனால்தான் துருவப்பகுதியில் இருந்தும் இந்த நீர் உறையாமல் உள்ளது. இந்த நீர் ஆதாரத்தின் தன்மைகளை ஆய்வு செய்கையில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் சூட்சுமமாக தெரியவருகிறது என்று அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.