வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (13:24 IST)

சவூதி அரேபிய மருத்துவமனைகளுக்குப் பெண் செவிலியர்கள் தேவை

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி / எம்எஸ்சி தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 30 வயதிற்குட்பட்ட மகளிர் செவிலியர்கள் தேவை.
 
இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு, புதுடில்லி, பெங்களுரு, கொச்சின் ஆகிய இடங்களில் 6.8.2014 முதல் 17.8.2014 வரை நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 70 விழுக்காடு மதிப்பெண்களும் மற்றும் பிஎஸ்சியில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
 
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் வழங்கப்படும். 
 
மேற்குறிப்பிட்ட பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை, எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞசல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்கள் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறியலாம். 
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.