மத்திய சேமிப்புக் கழகத்தில் வேலை வாய்ப்பு

Ashok| Last Modified செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:16 IST)
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய

சேமிப்புக் கழகத்தில்
(Central Warehousing Corporation) பஞ்சகுலா பிராந்திய அலுவலகத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Warehouse Assistant Grade II

காலியிடங்கள்: 22

வயதுவரம்பு: 10.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கணினியில் அலுவலக பணிகளை செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320 + இதர படிகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Regional Manager, Cenetral Warehousing Corporation என்ற பெயரில் Panchkula இல் மாற்றத்தக்க நகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 12.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :