இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலி பணியிடங்கள்

Ashok| Last Updated: வியாழன், 1 அக்டோபர் 2015 (20:58 IST)
புதுடில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியிடங்கள். அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதி), உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம் : உதவி இயக்குநர் - 08

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்
.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: இளங்கலை பட்டம் மற்றும் விளையாட்டு மேலாண்மையில் எம்பிஏ முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி
நாள் : 12.10.2015

காலி பணியிடம்: இயக்குநர் (நிதி)
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

தகுதி: 'V' Group Account Officer ஆடிட் மற்றும் அக்கவுண்ட்சில் ரூ.6,600 தர ஊதியத்துடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 05.10.2015

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Secretary என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :