IGNOU-வில் அலுவலகப் பணி வாய்ப்பு

Webdunia|
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக இக்னோ இணையதளத்தில் வெளியாகியுள்ள பணி அறிவிப்பு விளம்பரத்தில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரிவில் 63 காலியிடங்களும், செமி புரொபஷனல் அசிஸ்டென்ட் பணியில் 18 காலியிடங்களும், ஸ்டெனோகிராபர் பணியில் 114 காலியிடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் (டைப்பிஸ்ட்) பணியில் 219 காலியிடங்களும் உள்ளன.

இந்தப் பணிகளுக்கான தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப/தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இக்னோவின் இணையதளமான www.ignou.ac.in/adv/admin/Advt.pdf என்ற முகவரியில் காணலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ignou.ac.in/adv/admin/application.pdf என்ற முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள், சாதாரண தபால் மூலமாக IGNOU, IGNOU Post Office, Post Bag No.09, Maidan Garhi, New Delhi - 110068 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :