5 பாடங்களுக்கான SET தேர்வு: பாரதியார் பல்கலை. அறிவிப்பு

கோவை| Webdunia| Last Updated: ஞாயிறு, 23 பிப்ரவரி 2014 (00:18 IST)
பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒருங்கிணைப்புடன் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கு (SET) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலாண்மை, சட்டம், தத்துவம், நூலக அறிவியல், உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான கூடுதல், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் என பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் b-u.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலாளர், மாநில கல்லூரி விரிவுரையாளர் தகுதிகாண் தேர்வு, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு ஜூலை 17ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :