15 ஆம் தேதி ராணுவத்திற்கு ஆளெடுப்பு!

Webdunia| Last Modified செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:16 IST)
இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி வரும் 15 ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடக்கிறது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் இத்தேர்வு நடைபெறுகிறது. வரும் 15 ஆம் தேதி தொழில்நுட்பம் மற்றும் நர்சிங் உதவியாளர் பணிக்கு வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

வரும் 16 ஆம் தேதி பொதுப்பணிக்காக காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வரும் 17 ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடக்கிறது.
வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணமாலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 18 ஆம் தேதி டிரேட்ஸ் மேன் பணிக்கும் 19 ஆம் தேதி எழுத்தர்/ஸ்டோர் கீப்பர்/டெக்னிக்கல் பணிக்கும் தேர்வு நடைபெறும். சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணிக்கான திறனறிவு தேர்வு அக்டோபர் 20 ஆம் தேதி நடக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :