வேலை தேடுவோர் ஆன்லைனில் பதிவு செய்ய நவீன திட்டம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
வேலை வாய்ப்பு அலுவலகங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியில் நவீனப்படுத்தும் புதிய திட்டம் துவக்கப்படவுள்ளது எ‌ன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ன்மூல‌ம், வேலை தேடுவோர் எந்த இடத்தில் இருந்தும் எந்த வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த நவீன திட்டத்திற்காக தேசிய இணையதள‌ம் உரிய மென்பொருளுடன் உருவாக்கப்படவுள்ளது. பல்வேறு திறன்களுடைய நபர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இதில் இருக்கும்.
மேலும், தொழில் துறைக்கு தேவைப்படும் திறன்கள் பற்றிய தகவலையும் அளிக்கும் இந்த இணையதள‌ம், தொழில் துறையினரையும், வேலை தேடுவோரையும் இணைக்கும் பாலமாக இருக்கு‌ம் எ‌ன்று ‌பிரணா‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :