விளம்பரத்துறையில் உள்ள வேலைவாய்ப்பு!

Webdunia|
தொழில், வர்த்தகம் உள்ளிட்ட எந்தவொரு துறையின் வெற்றிக்கும் பெரும் உந்து சக்தியாக இருப்பது விளம்பரம். இன்று எந்தவொரு துறையையும் விட்டு வைக்காமல் எங்கும் பரந்து விரிந்து, தனது ஆதிக்கத்தை அது நிலை நாட்டியுள்ளது. அத்தகைய விளம்பரத்துறையில் விசாலமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதைப்பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

வர்த்தக் நிறுவனங்களோ அல்லது மற்ற துறைகளோ தங்களின் உற்பத்தி, சேவைகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டுமென்றால், அதற்கு விளம்பரம் மிகவும் அவசியம். தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக மக்கள் இடையே சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஒரு கருவியாக உள்ளது. விளம்பரம் இல்லை என்றால் வணிகம் இல்லை என்பதே உண்மை.

என்னென்ன வாய்ப்புகள்?: போட்டி நிறைந்த இன்றைய உலகில் வேலை தேடுவோருக்கும், பணம் ஈட்ட விரும்புவோருக்கும் நல்ல பல வாய்ப்புகளை விளம்பரத்துறை தருகிறது.
சிந்திக்கத் தூண்டுகிற, கவர்ந்திழுக்கும் கருத்துக்களுடன் விளம்பரங்களை உருவாக்குதல், விளம்பரப் படங்களில் நடிப்பது, விளம்பரப் படப்பிடிப்பை நடத்துவது, ஊடகங்களில் அவற்றை சேர்ப்பிப்பது, புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது, ஒரு நிறுவனத் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் கண்காட்சி உள்ளிட்டவற்றை நடத்துவது, வாடிக்கையாளர்கள் தொடர்பை ஏற்படுத்தித் தருவது, விற்பனை மேலாளர் பணி, விற்பனை பிரதிநிதிகள் பணி என ஏராளமான வேலைவாய்ப்புகள் இத்துறையில் கொட்டிக் கிடக்கின்றன.
விளம்பர முகமைகளை அமைத்து அதை திறம்பட நிர்வகித்தால் நல்ல வருவாய் பெறலாம். தொழில் நிறுவனங்களுக்கு விளம்பரங்களை அமைத்துத் தருதல், அவற்றை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை போன்ற ஊடகங்களில் வெளியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :