ராணுவ கல்வித்துறையில் சேர இளைஞர்களுக்கு வாய்ப்பு

கோவை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:00 IST)
ராணுவத்தில் ஹவில்தார் கல்வித் துறையில் குரூப் "எக்ஸ்' மற்றும் "ஒய்' பிரிவில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் நடத்தப்படும் ஆள் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது இரண்டும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குரூப் "எக்ஸ்'-ல் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. அல்லது பிஏ, பிஎஸ்சி, பிசிஏ, பிஎட். குரூப் "ஒய்'-ல் பிஏ, பிஎஸ்சி, பிசிஏ முடித்திருக்க வேண்டும்.
20 முதல் 25 வயதுக்குள் (1985 ஏப்.5 முதல் 1990 ஏப்.4-க்குள்) இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கவரின் மேல்பகுதியில், “அப்ளிகேஷன் ஃபார் ஹவில்தார் எஜுகேசன” என எழுதி சுயமுகவரியிட்ட இரு கவர்களுடன் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், கோவை என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் குறித்து தெரிந்து கொள்ள 0422-222 2022 என்ற தொலைபேசி நம்பருக்கு காலை 9 முதல் பகல் ஒரு மணி வரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 25.


இதில் மேலும் படிக்கவும் :