மத்திய காவல்துறை எஸ்.ஐ. தேர்வு அறிவிப்பு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:54 IST)
மத்திய காவல்துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய காவல்துறை அமைப்புகளின் எஸ்.ஐ. தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு 9801 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுமதி சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் பங்கேற்க பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :