மதுரை காமராஜ் பல்கலையில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சென்னை| Webdunia|
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையின் சார்பில் ஃபிரிட்ஜ் மற்றும் ஏ.சி. மெக்கானிக் குறித்த ஒரு ஆண்டு சான்றிதழ் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் சேரலாம். மொத்தம் 25 மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர்க்கப்பட உள்ளனர்.

பயிற்சி நடைபெறும் இடம் குறித்த தகவல் மற்றும் விண்ணப்படிவங்களை நேரில் பெற “இயக்குநர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித்துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகர்கோயில் ரோடு, மதுர” என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0452 -2537838 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :