மதுரை காமராஜர் பல்கலை.யில் அழகுக்கலை பயிற்சி

Webdunia| Last Modified செவ்வாய், 26 மே 2009 (14:59 IST)
மதுரை காமராஜ‌ர் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கான அழகு‌க் கலை‌ப் ப‌யி‌ற்‌சி அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ளது.

இது கு‌றி‌த்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயக்குனர் முத்துலட்சுமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் கல்வி மற்றும் விரிவாக்க பணித்துறை சார்பில், பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி நடத்தப்படுகிறது.

மூ‌ன்று மாத கால‌ம் கொ‌ண்டதாக இ‌ந்த ப‌யி‌ற்‌சி அமையு‌ம். நாளை முதல் பயிற்சி தொடங்குகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.
விண்ணப்பங்கள், மதுரை அழகர் கோயில் சாலை, பாண்டியன் ஓட்டல் எதிரே உள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன. விவரங்களுக்கு 0452 - 2537838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :