மக்கள் நலப்பணியாளர் பணி

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:39 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மக்கள் நலப்பணியாளர் பணியிடத்தை நிரப்ப அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் தகுதியான நபர்கள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்.

அ‌ந்த‌ந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்களது ‌‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் (ச‌னி‌க்‌கிழமை) வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள பாக்கம், பூண்டி ஒன்றியத்தில் மாமண்டூர், மீஞ்சூர் ஒன்றியத்தில் ஆலாடு, திருவெள்ளவாயல், பூந்தமல்லி ஒன்றியம் நேமம் மற்றும் திருமணம் ஆகிய 6 இடங்களுக்கு மக்கள் நலப்பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்தப் பணியிடங்களு‌க்கான வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மக்கள் நலப்பணிக்கு பிரதி மாதம் ரூ.950 ஊதியமும், ரூ.50 பயணப்படியும் வழங்கப்படும் எ‌ன்று மாவ‌ட்ட ஆ‌ட்‌சியர் கோ.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :