ப‌ட்டதா‌ரி பெ‌ண்களு‌க்கு இலவச தொ‌ழி‌ற்ப‌யி‌‌ற்‌சி

Webdunia| Last Modified திங்கள், 29 டிசம்பர் 2008 (15:06 IST)
சுயதொ‌ழி‌ல் தொட‌ங்க ஆ‌ர்வ‌ம் உ‌ள்ள ப‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் ப‌ட்டய‌ம் பெ‌ற்ற பெ‌ண்களுக்கு 2 வார இலவச தொ‌ழி‌ற் ப‌யி‌ற்‌‌சிக்கு இ‌ந்‌திய‌ன் ஓவ‌‌ர்சீ‌ஸ் வ‌ங்‌கி ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

இ‌ந்த ப‌யி‌ற்‌சி முகா‌ம் செ‌ன்னை‌யி‌ல் வரு‌கிற ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌ம் 2ஆ‌ம் தே‌தி முத‌ல் 14ஆ‌ம் தே‌தி வரை நட‌க்‌கிறது.

முகா‌மி‌ல் ப‌ங்கே‌ற்கு ‌விரு‌ம்புவோ‌‌ர் ப‌ட்ட‌ப் ப‌ிடி‌ப்பு அ‌ல்லது ப‌ட்டய‌ம் படி‌த்தவராகவு‌ம் 25 முத‌ல் 35 வயது‌க்கு‌ட்ப‌ட்டவராகவு‌ம் இரு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
ஏதாவது ஒரு சுயதொ‌ழி‌ல் தொட‌ங்குவ‌தி‌ல் ஆ‌ர்வ‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ம‌ற்றும் ஏ‌ற்கனவே சுயதொ‌ழி‌‌லி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள பெ‌ண்க‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம். ‌திருமணமான பெ‌‌ண்களு‌க்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

வி‌ண்ண‌ப்‌ப‌த்தை சுய ‌விலாச‌மி‌ட்ட உறையுட‌ன் 'பெ‌ண் தொ‌ழி‌ல் முனைவோ‌‌ர் ‌‌பி‌ரிவு', இ‌ந்‌திய‌ன் ஓவ‌ர்‌சீ‌ஸ் வ‌ங்‌கி, 763, அ‌ண்ணாசாலை, செ‌ன்னை-2 எ‌ன்ற முகவ‌ரி‌க்கு வரு‌ம் 31ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் அனு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய‌ன் ஓவ‌ர்‌சீ‌ஸ் வ‌ங்‌கி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :