பேக்கரி பொருள்கள் தயாரிக்க பயிற்சி

Webdunia|
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மே 18ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

5 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் பன், ரொட்டி, கேக் உள்ளிட்ட 20 வகை பேக்கரி பொருள்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்த பின் பிரதமர் வேலை வாய்ப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 முதல் 35 சதவீத மானியத்துடன் ரூ.2.5 லட்சம் வரை கடன் பெற வழி வகை செய்யப்படும்.

மேலும் விவரங்க‌ள் அ‌றிய - 044 - 2555 5402, 2902 3718 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு பேசலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :