பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கப்பல் படையில் நிரந்தர பணிவாய்ப்பு

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 4 ஜூன் 2009 (17:05 IST)
இந்திய கப்பல்படையில் (தொழில்நுட்பப் பிரிவில்) பிளஸ் 2 தகுதி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 02.01.1991 முதல் 01.07.1993க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குறைந்தது 157 செ.மீட்டர் உயரமும் அதற்கேற்ற உடல் எடையும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 நாட்கள் இரு கட்டமாக தேர்வு நடத்தப்படும். இதில் முதற்கட்ட தேர்வில் திறனறிதல், பிக்சர் பெசப்ஷன், விவாதம் ஆகிய முறைகள் இடம்பெறும்.

முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் 2வது கட்டமாக உளவியல் திறனறிதல், குழுத் திறனறிதல், நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதிலும் தேர்வு பெறுபவர்களுக்கு இறுதியாக மருத்துவத் தகுதித் தேர்வு மேற்கொள்ளப்படும்.
முகவரி: மே 23-29ஆம் தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இதற்கான விண்ணப்பப் படிவமும், முழு விளக்கமும் தரப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Post Bag No:4, Nirman Bhavan, New Delhi- 110001 என்ற முகவரிக்கு ஜூன் 29ஆம் தேதிக்கும் சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :