பட‌ப்பை‌யி‌ல் வேலைவாய்ப்பு முகாம்

Webdunia| Last Modified வியாழன், 19 பிப்ரவரி 2009 (11:47 IST)
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி‌யி‌ல் இ‌ந்த ஆ‌ண்டு‌க்கான வேலை வாய்ப்பு முகா‌ம் நடைபெற உ‌ள்ளது.

தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் கு‌றி‌த்து கல்லூரியின் தலைவர் கே.மூசா கூறுகை‌யி‌ல், கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 21, 22-ம் தேதிகளில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் பிளஸ் டூ படித்தவர்கள் முதல் பொறியியல் கல்வி படித்தவர்கள் அனைவரு‌ம் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
கடந்த 2007-ல் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 10,600 பேர் கலந்து கொண்டதில் 1,012 பேரும், கடந்த ஆண்டில் 13,800 பேர் கலந்து கொண்டதில் 1,061 பேரும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இந்த ஆண்டில் 20 ஆயிரம் பேர் பங்கு பெறுவார்கள் என்று எதிர் பார்ப்பதாகக் கூறினார் கே.மூசா.


இதில் மேலும் படிக்கவும் :