பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை| Webdunia| Last Modified திங்கள், 12 அக்டோபர் 2009 (17:35 IST)
பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் பானு ஏழுமலை தெரிவித்துள்ளார்.

கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மின்னணுவியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம், ஹிந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களும், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., முடித்த 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்தும் சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :