நந்தனத்தில் வேலை வாய்ப்பு முகாம்

Webdunia| Last Modified சனி, 21 பிப்ரவரி 2009 (12:01 IST)
நந்தனம் கலைக்கல்லூரியில் நாளையும், நாளை மறுநாளும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கல்லூரி கல்வி இயக்கக வேலை வாய்ப்பு மையம் சார்பில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிப்பவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
முன் அனுபவம் தேவையில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் இருக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மார்க்கெட்டிங், இன்ஸ்யூரன்ஸ், பிபிஓ அனிமேஷன் மற்றும் வெப்டிசைனிங் பணிக்கு சுமார் 500 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

வேலை வாய்ப்பு முகாமிற்கு வருபவர்கள் சுயவிவர பட்டியலுடன் (ரெஸ்யூமே) கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :