தகவல்தொழில்நுட்ப பொறி​யா​ளர்​க​ளுக்கு ஆப்​​ரிக்​கா​வில் பணிவாய்ப்பு

விழுப்​பு​ரம்| Webdunia| Last Modified வியாழன், 3 டிசம்பர் 2009 (12:47 IST)
எலக்ட்​ரா​னிக்ஸ் மற்​றும் தக​வல் தொடர்​பி​யல் பிரி​வில் பொறி​யியல் பட்​டம் மற்றும் பட்​ட​யம் படித்​த​வர்​க​ளுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் அயல்​நாட்டு வேலைவாய்ப்பு நிறு​வ​னம் மூலம் ஆப்​​ரிக்காவில் வேலை​ அளிக்​கப்​பட உள்​ள​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், த​மி​ழக அர​சின் சார்​பில் செயல்​பட்டு வரும் அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வ​னம்,​ மருத்​து​வர்​கள்,​ மருத்​து​வம் சார்ந்த பணி​யா​ளர்​கள்,​ பொறி​யா​ளர்​கள்,​ டெக்​னீ​ஷி​யன்​கள் மற்​றும் இதர தொழில்திறன் படைத்த மனு​தா​ரர்​களை பல்​வேறு நா​டு​க​ளுக்கு வேலைக்கு அனுப்​பி ​வ​ரு​கி​றது.
தற்​போது தொலைத்தொடர்​பு துறை​யில் சாட்​டி​லைட்,​ நெட்​வொர்க்​கிங் மற்​றும் ஹார்​டு​வேர் அனு​ப​வம் உள்​ள​வர்​களை ஆப்ரிக்காவுக்கு அனுப்ப வேலைவாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொறியியல் பிரிவில் எல்​கட்​ரா​னிக் மற்​றும் கம்​யூ​னி​கே​ஷன்,​ பி.டெக் தக​வல் தொடர்​பி​யல் பட்​டம் பெற்​ற​வர்​க​ளுக்கு ஓராண்டு அனு​ப​வ​மும், டிப்​ளமோ படித்​த​வர்​க​ளுக்கு 3 ஆண்​டு அனுபவ​மும் அவ​சி​யம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வய​துக்கு உட்பட்​ட​வ​ராக இருக்க வேண்​டும்.
ஆப்ரிக்கா செல்வதற்கான விசா,​ நிறை​வான ஊதி​யம்,​ இல​வச இருப்​பி​டம்,​ விமான பய​ணச்சீட்டு,​ பணிக்​கா​லத்​தில் போக்​கு​வ​ரத்து செலவு ஆகி​யவை வேலை அளிப்​ப​வ​ரால் வழங்கப்ப​டும்.

மேற்​கா​ணும் தகுதி உடை​ய​வர்​கள் இரு விண்​ணப்​பத்​து​டன்,​ மூன்று புகைப்​ப​டங்​கள்,​ கல்வி,​ அனு​ப​வம்,​ பாஸ்​போர்ட் மற்​றும் இதர சான்​றி​தழ்​க​ளின் நகல்​க​ளு​டன் இணைத்து “அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வ​னம்,​ எண்:48, டாக்​டர் முத்​து​லட்​சுமி சாலை,​ அடை​யாறு,​ சென்னை-​20” என்ற முகவரிக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்​குள் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :