டிஎ‌ன்‌பி‌எ‌ஸ்‌சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி

Webdunia|
த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணைய‌த்தா‌ல் நட‌த்த‌ப்படு‌ம் குரு‌ப் 2 தே‌ர்வு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க டிச‌ம்ப‌ர் 30 ஆ‌ம் தே‌தி கடை‌சிநா‌ள் எ‌ன்று தே‌ர்வாணைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மூலம் உதவி பிரிவு அதிகாரி, வருவாய் உதவியாளர், உள்ளாட்சி தணிக்கையாளர், சார்-பதிவாளர், கூட்டுறவு சங்க ஆய்வாளர் பதவிகள் உள்பட 2,414 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன‌.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்க‌ள், அனைத்து தலைமை தபால் நிலையங்களும் ‌கிடை‌க்கு‌ம். குரூப்-2 தேர்வை பட்டதாரிகள் எழுதலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ஆ‌ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 22ஆ‌ம் தேதி நடத்தப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :