செ‌ன்னை‌யி‌ல் இலவச கணினி பயிற்சி

Webdunia| Last Modified வெள்ளி, 20 பிப்ரவரி 2009 (11:54 IST)
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயிற்சி மையம் சென்னையில் நடத்த உள்ளது.

இந்த 3 மாத பயிற்சியில் எம்.எஸ்.வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், அக்சஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 32 வயதுக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்த தகுதி உடையவர்கள் ஆவர்.

இதில் சேர விரும்புபவ‌ர்க‌ள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்.
56, சாந்தோம் நெடுஞ்சாலை. 3-வது தளம்,
சென்னை-4 எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலரை தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :