சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை வேலை வா‌ய்‌‌ப்பு முகா‌ம்

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 16 ஏப்ரல் 2010 (11:04 IST)
சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக வேலை வா‌ய்‌ப்பு முகா‌ம் நாளை நடத்தப்படுகிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த முகாமில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ. பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.

இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் பங்கேற்கலாம். 10ஆ‌ம் வகு‌ப்பு, பிளஸ்2 தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
தேர்வுக்கு வரும்போது, கல்லூரி அடையாள அட்டை, 10ஆ‌ம் வகு‌ப்பு, பிளஸ் மதிப்பெண் சான்றிதழ், 5 செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் அனைத்து‌ம் 2 ஜெராக்ஸ் காப்பி எடுத்துவர வேண்டும்.

இந்த முகாமை துணைவேந்தர் ஜி.திருவாசகம் நாளை காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய பேராசிரியர் என்.ராஜா உசைனை 94447-85015 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 044-25399418, 25399518 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு விவரம் பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :