சென்னையில் கேமரா பயிற்சி வகுப்பு

Webdunia| Last Modified புதன், 8 ஏப்ரல் 2009 (15:04 IST)
திரைப்படம் சார்ந்த விழிப்புணர்வு தமிழ் நாட்டில் அதிக‌ரித்து வருகிறது. திரைப்பட கலை குறித்து படிக்க இளைஞர்கள் காட்டும் ஆர்வம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக‌ரித்திருக்கிறது.

திரைப்படம் குறித்து பயில போதுமான கல்லூரிகள் இல்லாத நிலையில் தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு படையெடுக்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள். அவர்களின் ஆர்வத்துக்கு தீனிபோடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ டாட்காம் ஏ.எஸ்.கே.ஸ்டுடியோவுடன் இணைந்து சென்னையில் கேமரா குறித்த பயிற்சி வகுப்பை நடத்துகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் மே மாதம் பதினைந்தாம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. கேமரா குறித்த அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்கிறவர்கள் குறும் படம் எடுக்கவும் வகை செய்யப்படும். இதில் சிறந்த சிறந்த ஒளிப்பதிவுக்கான குறும் படம் தேர்வு செய்யப்பட்டு, அவர் அசிஸ்டெண்ட் கேமராமேனாக திரைப்படத்தில் பணிபு‌ரிய வாய்ப்பளிக்கப்படும்.
தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். மூன்று நாள் பயிற்சி கட்டணம் ஒருவருக்கு 1750 ரூபாய், உணவையும் சேர்த்து. மேலும் விவரங்களுக்கு 9840698236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :