சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்

புதுடெல்லி:| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சுயதொழில் தொடங்கி வருவாய் ஈட்டிக் கொள்ள உதவும் வகையில் அவர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் கடன் வழங்குகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :

மத்திய சிறுபான்மையினர் நலத்துறையால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்கி வருவாய் ஈட்டும் வகையில் கடன் வழங்கி வருகிறது.
மாநில,யூனியன் பிரதேசங்களால் நியமிக்கப்பட்ட முகமைகளின் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறு கடன்களையும் வழங்கி வருகிறது. தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி பெறுவதற்கும் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

நடப்பு நிதியாண்டில் 79,860 பேருக்கு ரூ.185 கோடி நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறுபான்மையினர் நலத்துறைக்கும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. இவ்வாறு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :