காவல்துறையில் நாடு முழுவதும் 2.5 லட்சம் காலியிடங்கள்

புதுடெல்லி| Webdunia| Last Modified புதன், 2 டிசம்பர் 2009 (18:32 IST)
நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கடந்த ஜனவரி 1, 2008 கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் காவல்துறையில் 2.67 லட்சம் பணிவாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் மராட்டியத்தில் அதிகபட்சமாக 49,252 பணியிடங்களும், ஜம்மு-காஷ்மீரில் 36,760 பணியிடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 22,267 பணியிடங்களும், பீகாரில் 22,113 பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதேபோல் ஆந்திராவில் 19,268 இடங்களும், கர்நாடகாவில் 17,453 இடங்களும், சட்டீஸ்கரில் 14,867 இடங்களும், தமிழகத்தில் 14,448 இடங்களும், மேற்குவங்கத்தில் 12,030 இடங்களும், டெல்லியில் 12,030 இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டிய பொறுப்பு அந்த மாநில அரசுகளுக்கு உரியது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :