கடற்படை பணிக்கு விண்ணப்‌பி‌க்க ஜன.5 கடை‌சி நா‌ள்

Webdunia|
இந்திய கடற்படையில் ஆர்டிஃபீசர் அப்ரன்டீஸ், சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளு‌க்கு வரு‌ம் 5ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் விண்ண‌‌்பி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌‌ள்ளது.

இது தொட‌ர்பாக செ‌ன்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரனவெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், "இந்திய கடற்படையில் ஆர்டிஃபீசர் அப்ரன்டீஸ் மற்றும் சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் திருமணமாகாத இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 1-8-88 முதல் 31-7-92-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியலை முதல் பாடமாக படித்திருக்க வேண்டும். துணைப் பாடங்களாக வேதியல், உயிரியல் மற்றும் கணினி ஆகியவற்றையும், இந்த பாடங்களில் 55 ‌விழு‌க்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "Post Box No.488, Gole Dak Khana, GPO, New Delhi - 110001" என்ற முகவரிக்கு ஜனவ‌ரி 5ஆ‌ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :