ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு!

Webdunia|
தமிழக அரசால் நடத்தப்படும் உதவித் தொகையுடன் கூடிய ஓதுவார் பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் செயல்படும் ஓதுவார் பயிற்சி நிலையத்தில், ஓதுவார் பணிக்கு 3 ஆண்டு காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகுதிகள்: ஓதுவார் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்துவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8- வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2008-தேதிப்படி 14 வயது நிரம்பியவராகவும், 20 வயதுக்குட்பட்டவராகவும் இருப்பது அவசியம்.
விண்ணப்பதாரர் ஆன்மீகம், இசை ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், மது, புலால் உண்ணாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உதவித் தொகையுடன் பயிற்சி: ஓதுவார் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பயிற்சி நிலையத்திலேயே தங்க வேண்டும். அவர்களுக்கு இலவச உணவு, சீருடை, உறைவிடம் மற்றும் பயிற்சிக்கால உதவித்தொகை ஆகியன வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், தந்தை/ காப்பாளர் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து வரும் 29.09.2008 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை 'இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :