ஐடிபிஐ இன்சூரன்ஸ் 7,500 முகவர்களை நியமிக்கிறது!

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:03 IST)
ஐடிபிஐ ஃபோர்டிஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், தனது காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்ய நாடு முழுவதும் 7,500 விற்பனை முகவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐடிபிஐ ஃபோர்டிஸ் காப்பீட்டின் தலைமை செயல் அலுவலர் ஜி.வி. நாகேஸ்வர ராவ், “இன்னும் ஓர் ஆண்டிற்குள் 1,000 ஊழியர்களை பணியில் சேர்க்கவும், 7,500 காப்பீட்டு திட்ட விற்பனை முகவர்களையும் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் மேலும் 65 கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் 20 கிளைகள் இந்த ஆண்டில் திறக்கப்படும் என்றும் நாகேஸ்வர ராவ் கூறியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் காப்பீட்டு நிறுவனமான ஃபோர்டிஸ் உடன் ஐடிபிஐ வங்கியும், ஃபெடரல் வங்கியும் இணைந்து ஐடிபிஐ ஃபோர்டிஸ் என்ற காப்பீட்டு நிறுவனத்தைத் துவக்கியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :